சுகாதார ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு முழுவதும் தற்காலிக சுகாதாரத்துறை ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கைதான ஆயிரத்து 646 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமையில் சுகாதார துறை ஆய்வாளர்கள் 43 பேர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டரமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story