பாகலூர் அருகே கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை


பாகலூர் அருகே கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2021 1:23 AM IST (Updated: 1 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:
புதுச்சேரி மாநிலம் சின்ன கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 39). தொழில் அதிபரான இவர் பாகலூர் அருகே பெலத்தூர் பகுதியில் தங்கி இருந்து, பாகலூரில் பில்டர்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு அதிகமாக கடன் பிரச்சினை இருந்தது. இதனால் மன வருத்தத்தில் காணப்பட்ட அவர், விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story