காரிமங்கலம் அருகே இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிளீனர் பலி டிரைவர் படுகாயம்


காரிமங்கலம் அருகே இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிளீனர் பலி டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Dec 2021 1:23 AM IST (Updated: 1 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிளீனர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிளீனர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.
லாரி கவிழ்ந்து கிளீனர் பலி
பெங்களூருவில் இருந்து  இரும்பு பைப் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் திருச்சூருக்கு நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை பர்கூர் அடுத்த பாகிமானூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் (வயது29) என்பவர் ஓட்டி வந்தார். அதேபகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(28) கிளீனராக உடன் வந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கிளீனர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சிதம்பரம் படுகாயம் அடைந்தார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  காரிமங்கலம் போலீசார் இறந்த சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story