ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்
உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
இது டெல்டா வைரஸ் போன்ற பிற தொற்று வகைகளை போலவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளான அதிக உடல் சோர்வு, தொண்டை வலி, மிதமான உடல் தசை வலி, வறட்டு இருமல், மிதமான காய்ச்சல் போன்றவை தென்பட்டால் காலதாமதமின்றி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு ஆஸ்பத்திரிகளையும் அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகிய அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்றின் தீவிரத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story