கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் தண்ணீர்


கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் தண்ணீர்
x
தினத்தந்தி 1 Dec 2021 1:49 AM IST (Updated: 1 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே அழகாபுரி கண்மாய் உடைந்து எம்.புதுக்குளம் வரை தண்ணீர் மறுகால் பாய்கிறது.

காரியாபட்டி, 
தொடர்மழையினால் நரிக்குடியை அடுத்த அழகாபுரி கண்மாய் உடைந்து எம்.புதுக்குளம் வரை தண்ணீர் மறுகால் பாய்கிறது. பள்ளங்கண்மாய் உடைந்ததால் எம்.புதுக்குளம் வரை தண்ணீர் வந்து கலுங்கு வழியாக மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கலுங்கு வழியாக தண்ணீர் செல்வதால் இங்குள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே தண்ணீர் தேங்காத வண்ணம் விரைந்து வடிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story