சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 8:35 PM GMT (Updated: 2021-12-01T02:05:16+05:30)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 25). இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி 9 வயது சிறுமியை கரடு பகுதிக்கு தனியாக அழைத்து சென்றார்.
பின்னர் அவர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். 
பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவராஜை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 
அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.


Next Story