மாவட்ட செய்திகள்

அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + To flood

அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ராஜபாளையம்,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல ராஜபாளையத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த மழை நேற்று மதியம் வரை பெய்தது. இதனால் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மகப்பேறு மருத்துவமனை, சங்கரன்கோவில் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2. தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
3. கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
விருதுநகர் கவுசிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
4. தென்காசியில் பரவலாக மழை; குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்குள்ள பாலாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, வைகையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.