சென்னை விமான நிலையத்தில் ரூ.9 கோடி போதைப்பொருட்கள் தீயில் எரித்து அழிப்பு - சுங்க துறை அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை விமான நிலையத்தில் ரூ.9 கோடி போதைப்பொருட்களை சுங்க துறை அதிகாரிகள் ராட்சத எரியூட்டும் கருவியில் போட்டு எரித்து சாம்பலாக்கி அழித்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் விமான நிலைய சரக்கக பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளிடம் இருந்தும் வெளிநாட்டிற்கு அனுப்ப இருந்த பாா்சல்களில் இருந்தும் சுங்க இலாகா துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா் ஆகியோா் சோதனை நடத்தி ரூ.9 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 47 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனா்.
விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில், போதைப்பொருட்களை அழிக்க சுங்க இலாகா அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாா் முடிவு செய்தனா்.
இதையடுத்து செங்கல்பட்டு அருகே உள்ள பயோமெடிக்கல் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலைக்கு போதைப்பொருட்களை எடுத்து சென்ற அதிகாரிகள் அங்குள்ள ராட்சத எரியூட்டும் கருவியில் போட்டு எரித்து சாம்பலாக்கி அழித்தனர்.
Related Tags :
Next Story