பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 21 ஆயிரம் கன அடியாக குறைப்பு
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 21 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது.
பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மபள்ளி அணையில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. நேற்று முன்தினம் மாலை அதிகபட்சமாக வினாடிக்கு 26 ஆயிரத்து 200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஏரியின் அருகே ஒதப்பையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மழை நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 79 கனஅடியாக இருந்தது.
ஏரியில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரத்து 79 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
Related Tags :
Next Story