கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பஜாரிலுள்ள கடைகளில் நட்சத்திரங்கள், குடில்கள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பஜாரிலுள்ள கடைகளில் நட்சத்திரங்கள், குடில்கள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்
x
தினத்தந்தி 1 Dec 2021 5:09 PM IST (Updated: 1 Dec 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பஜாரிலுள்ள கடைகளில் நட்சத்திரங்கள், குடில்கள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்

கோவில்பட்டி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பஜாரிலுள்ள கடைகளில் நட்சத்திரங்கள், குடில்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.
கிறிஸ்துமஸ்
கோவில்பட்டி பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, கோவில்பட்டி மெயின் ரோட்டு, எட்டயபுரம் ரோடு பகுதியிலுள்ள பஜார் கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி ஒளிரும் நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், சீரியல் விளக்குகள், கிறிஸ்மஸ் மரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா உடைகள், கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள், இதழ்கள், ஸ்டிக்கர்கள் சரங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்,‘ கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு தொற்று குறைந்து வருவதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கிறிஸ்துவர்கள் தயாராகி வருகின்றனர்.
பொருட்கள் குவிப்பு 
இந்த பண்டிகை தற்போது களைகட்ட தொடங்கி உள்ளது. மாலை நேரங்களில் பஜாரில் புத்தாடைகள் மற்றும் கிறிஸ்துமஸ் பொருட்களை வாங்க மக்கள் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் விதவிதமான கிறிஸ்துமஸ் பொருட்களை வியாபாரிகள் கடைகளில் குவித்து வருகின்றனர்.
கிறிஸ்மஸ் நட்சத்திரங்கள் ரூ.70-ரூ.450 வரையும், மேட்டாஸ் நட்சத்திரங்கள் ரூ.60-ரூ.800 வரையும், பேப்பர் ஸ்டார்கள் ரூ. 10- ரூ.350 வரையும், மரங்கள் 1 அடி முதல் 8 அடி வரை ரூ. 80- ரூ.2,300 வரையும், சீரியல் எல்.இ.டி. விளக்குடன் நட்சத்திரம் ரூ.160- ரூ.850 வரையும், சீரியல் விளக்குகள் மட்டும் ரூ.70- ரூ.650 வரையும், கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள் ரூ.60- ரூ.180 வரையும், கிறிஸ்மஸ் வாழ்த்து சரம் ரூ.60- ரூ.350 வரையும், கிறிஸ்மஸ் தாத்தா உடைகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரூ.250- ரூ.1,600 வரையும் விற்பனைக்கு வைக்கப் படுள்ளதாக’ தெரிவித்தார்.

Next Story