தாமிரபரணி ஆற்றில் ஓடும் வெள்ளத்தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தை தொட்டவாறு செல்கிறது
தாமிரபரணி ஆற்றில் ஓடும் வெள்ளத்தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தை தொட்டவாறு செல்கிறது
ஆறுமுகநேரி:
தாமிரபரணி ஆற்றில் ஓடும் வெள்ளத்தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தை தொட்டவாறு செல்கிறது. இப்பகுதியில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
தாமிபரணியில் வெள்ளம்
நெல்லை மாவட்ட அணைகளில் நேற்று முன்தினம் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையை கடந்து, ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வினாடிக்கு 38 ஆயிரம் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது.
இதனால், ஏரலில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஓடியது. அந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்து இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளத்தண்ணீர் ஆற்றில் ஓடுகிறது.
கலெக்டர் எச்சரிக்கை
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டப்பகுதியில் தாமிரபரணி கரையோரங்களில் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் இரவு சிறிது நேரம் கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் அருகிலுள்ள முக்காணி ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஓடியது. இதை தெடர்ந்து அந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆற்றுப்பாலத்தை தொட்டவாறு...
நெல்லை மாவட்ட அணைகளில் நேற்று தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் அருகிலுள்ள முக்காணியிலுள்ள திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையிலுள்ள பழைய ஆற்றுப்பாலத்தை தண்ணீர் தொட்டவாறு ஓடுகிறது.
நேற்றுகாலை முதல் இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story