ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்


ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Dec 2021 8:22 PM IST (Updated: 1 Dec 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்

வேப்பனப்பள்ளி, டிச.2-
வேப்பனப்பள்ளி அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஷேர் ஆட்டோ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 35). இவரது ஷேர் ஆட்டோவில், முத்துராமன் உள்பட 7 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிந்தன் (33) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தமிழக எல்லையான அரியனப்பள்ளி அருகில் வந்த போது ஷேர் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
8 பேர் காயம்
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கோவிந்தன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோவும் கவிழந்தது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
3 ஆம்புலன்சு உடனே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்த 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story