மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 1 Dec 2021 8:44 PM IST (Updated: 1 Dec 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 9-வது வார்டு கிளை செயலாளர் புஷ்பலதா தலைமையில் முன்னாள் கவுன்சிலர்கள் நடராசன், செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த பகுதியில் வீடுகளுக்கு 25 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும் குடிநீரை வாரம் 2 முறை வழங்கவும், பொதுக்குழாய்களில் தினமும் தண்ணீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் மழைநீர் தேங்காத வகையில் மண்ணை கொட்டி சமப்படுத்த வேண்டும். சாக்கடை கால்வாய்களை முறையாக சுத்தம் செய்வதுடன், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்து எரிய செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Next Story