பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2021 8:47 PM IST (Updated: 1 Dec 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது

அனுப்பர்பாளையம், 
சாமுண்டிபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரம் பறிமுதல்  செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூதாட்டம் 
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
 போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 31), மனோஜ் (28), பாஸ்கர் (58), சுரேஷ்குமார் (30), சுதாகரன் (29), செல்வராஜ் (38), ராஜ்குமார் (30), பைரோஸ்கான் (32), பிரபு (32), ஆனந்தன் (38), சரவணன் (34), மணிகண்டன் (35), சக்திவேல் (41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 13 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.46 ஆயிரம் பறிமுதல்
அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story