57 பேருக்கு கொரோனா


57 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Dec 2021 9:08 PM IST (Updated: 1 Dec 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

57 பேருக்கு கொரோனா

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி நேற்று குறைந்து திருப்பூர் மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 97 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 609 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,000 ஆக உள்ளது.

Next Story