இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2021 9:33 PM IST (Updated: 1 Dec 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம்: 

கம்பத்தில், இந்து மக்கள் கட்சி மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கேரள அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

 சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த இந்து மக்கள் கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தப்படும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் தமிழக-கேரள எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல் பாண்டியன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் தனபால், நகர தலைவர் சரவணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 


Next Story