விளாத்திகுளத்தில் நேற்று திறக்கப்பட்ட புதிய கல்லூரியை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

விளாத்திகுளத்தில் நேற்று திறக்கப்பட்ட புதிய கல்லூரியை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 9:43 PM IST (Updated: 1 Dec 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் நேற்று திறக்கப்பட்ட புதிய கல்லூரியை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக திறக்கப்பட்ட கல்லூரி பெயர் பலகையிலும், நிகழ்ச்சி நடக்கும் போதும் திருச்செந்தூர் முருகன், விளாத்திகுளம் மீனாட்சி சாமி புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அந்த அமைப்பினர் கல்லூரியை முற்றுகையிட முயன்றனர். அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் சாமி புகைப்படங்கள் இடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 
இதையடுத்து அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story