கொடைக்கானல் ஏரிச்சாலையில் விழுந்த மரம்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 15 நாட்களுக்கு பிறகு, நேற்று காலை கொடைக்கானலில் வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் ஏரிச்சாலையோரத்தில் நின்ற மரம் ஒன்று, வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. மழை சற்று குறைந்த நிலையில், நேற்று மாலை முதல் கடும் குளிர் நிலவியது. அதிக மழை பெய்துள்ளதால் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், உறைபனி விரைவில் தொடங்கும் என்றும் கருதப்படுகிறது.
Related Tags :
Next Story