ராமநத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 29 பேர் காயம்


ராமநத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 29 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:10 PM IST (Updated: 1 Dec 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநத்தம், 

துக்க நிகழ்ச்சி

ராமநத்தம் அருகே ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வேனில் திட்டக்குடி அருகே கொட்டாரம் கிராமத்திற்கு சென்றனர். வேனை மேலாதனூரை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டினார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் அதே வேனில் ஊர்திரும்பினர். ஆவட்டிக்கும் ஆவட்டிகுடிக்காட்டிற்கும் இடையை வேன் சென்ற போது,  வையங்குடி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் ராஜி (வயது 40) என்பவர் சாலையின் குறுக்கே திடீரென வந்துள்ளார். 
அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக  கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
 இந்த விபத்தில்  மணிதுரை மனைவி கலையரசி (40), வெங்கடாசலம் மனைவி செல்லம்மாள் (60), செந்தில் மனைவி ஜெயலெட்சுமி (40),  விஜயக்குமார் மனைவி மேகலா (31) மற்றும் டிரைவர் கருப்புசாமி, சாலையை கடக்க முயன்ற ராஜி உள்பட 29 பேர் பலத்த காயமடைந்தனர்.

போலீசார் விசாரணை

  இது குறித்த தகவலின் பேரில்  ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story