ரூ55 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ55 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:17 PM IST (Updated: 1 Dec 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.55 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, 1,801 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். விழாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையாளர் ஆனந்தி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story