ஆபத்தை உணராமல் பஸ்கூரைமீது பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்


ஆபத்தை உணராமல் பஸ்கூரைமீது பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:35 PM IST (Updated: 1 Dec 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

குடியாதத்தில் இருந்து ஒடுகத்தூருக்கு செல்லும் பஸ்களில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பஸ் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். எனவே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

அணைக்கட்டு
 
குடியாதத்தில் இருந்து ஒடுகத்தூருக்கு செல்லும் பஸ்களில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பஸ் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். எனவே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. 
பஸ் மேற்கூரையில் பயணம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா மற்றும் வெட்டுவாணம், ஒதியத்தூர், திப்ப சமுத்திரம் வழியாக ஒடுகத்தூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் எந்தநேரமும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். மாலை மற்றும் காலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும், தி்ரும்பி வருவதற்கும் அரசு பஸ்கள் எதுவும் இல்லாததால் தனியார் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டிலும், மேற்கூரையிலும் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

கிராமப்பகுதிகளில் சாலைகளில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடந்து விடலாம் என்ற அச்சத்தில் பயணிகள் பஸ்சில் பயணிக்கின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆபத்தை உணராமல் மின்கம்பியையும் கவனிக்காமல் பஸ் கூரை மீது பயணம் செய்வது மிகவும் வேதனையாக உள்ளது.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

நேற்று முன்தினம் வேலூர் அருகே நடந்த பள்ளி மாணவர்களின் விபத்தை அறிந்தும் மாணவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பஸ்சில் பயணம் செய்வது மிகவும் வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
மாவட்ட நிர்வாகம் கிராம பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு டவுன் பஸ் களையு பள்ளிநாட்களில் சரியான நேரத்திற்கு இயக்கி மாணவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story