திண்டிவனம் அருகே ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது ஒருவர் காயம்
திண்டிவனம் அருகே ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது ஒருவர் காயம்
திண்டிவனம்
திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் இருந்து நேற்று மாலை லாரி ஒன்று அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு, நொளம்பூர் சாலை வழியாக அண்டப்பட்டு, ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளை நோக்கி சென்று கொண்டிருந்தது. செஞ்சி ரோட்டை சேர்ந்த தேவபாலு(வயது55) லாரியை ஓட்டினார். கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் சென்றபோது, எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வலதுபுறமாக திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர ஏரிக்கரை பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட மூட்டைகள் சரிந்து விழுந்தன. அரிசி மூட்டைகள் விழுந்து லாரியின் பின்னால் அமர்ந்திருந்த முருகன் என்பவர் காயம்அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் ஒலக்கூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story