14 நாட்கள் தனிமைப்படுத்தி ஒமைக்ரான் பரிசோதனை


14 நாட்கள் தனிமைப்படுத்தி ஒமைக்ரான் பரிசோதனை
x
தினத்தந்தி 1 Dec 2021 10:43 PM IST (Updated: 1 Dec 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம், 
வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை தொடர்ந்து டெல்டா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து தற்போது புதிதாக ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து இந்தியாவில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கானோர் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அவர்கள் சொந்த ஊருக்கு வரும்போது ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் அதுகுறித்த அச்சம் மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் யாருக்கும் இதுவரை ஏற்படவில்லை. கொரோனாவில் இருந்து உருமாறிய டெல்டா வைரசை விட 500 மடங்கு வீரியமிக்கதாக இருப்பதாகவும், தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
பரிசோதனை 
இருப்பினும் தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் தொற்று இருந்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள்.
தொற்று இல்லை என்று தெரியவந்தாலும் அவர்களின் சொந்த ஊருக்கு வந்ததும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொற்று இல்லாமல் வந்தாலும் அவர்களின் விவரங்கள் பெறப்பட்டு வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். வெளியில் செல்லவோ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
அனுமதி
8- வதுநாள் மற்றும் 14-வது நாள் அவர்களுக்கு பரிசோதனை செய்து அதில் எந்த தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப் பட்ட பின்னர்தான் வழக்கமான பணிகளை மேற் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக கண் காணித்து பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story