உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது


உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது
x
தினத்தந்தி 1 Dec 2021 10:47 PM IST (Updated: 1 Dec 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது


விழுப்புரம்

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர்  சேகர் மனைவி சாந்தி(வயது 51). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். இந்நிலையில் சேகரின் தம்பி மூர்த்தி(45) என்பவர் தனது அண்ணி சாந்தியை உல்லாசத்துக்கு அழைத்தார். இதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, சாந்தியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

Next Story