கால்வாய் நிரம்பியதால் இடுப்பளவு தண்ணீரில் சென்ற மாணவர்கள்


கால்வாய் நிரம்பியதால்  இடுப்பளவு தண்ணீரில் சென்ற மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Dec 2021 11:11 PM IST (Updated: 1 Dec 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

இடுப்பளவு தண்ணீரில் மாணவர்கள் சென்றனர்.

கீரமங்கலம்:
கொத்தமங்கலத்தில் உள்ள அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியாத்தாள் ஏரிக்கு அன்னதானக்காவேரி வழியாக நேற்று திடீரென கால்வாய் நிரம்பி தண்ணீர் சென்றது. கால்வாய்க்கு மற்றொரு கரை பக்கமாக குடியிருக்கும் பலரும் வெளியிடங்களுக்கு தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அதே போல பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து இடுப்பளவு தண்ணீரில் தங்கள் சைக்கிள்களை தள்ளிக் கொண்டு அடுத்த கரைக்கு வந்து நிறுத்திவிட்டு மீண்டும் சென்று புத்தகப்பை, சீருடைகளை எடுத்து வந்து சென்றனர்.

Next Story