மழைக்கு வீடு இடிந்ததால் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி


மழைக்கு வீடு இடிந்ததால் கழிவறையில் வசிக்கும் மூதாட்டி
x
தினத்தந்தி 1 Dec 2021 11:18 PM IST (Updated: 1 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மழைக்கு வீடு இடிந்ததால் கழிவறையில் மூதாட்டி வசித்துவருகிறார்.

மானாமதுரை, 
மானாமதுரை அருகே மல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட பில்லத்தி கிராமத்தில் அம்மாக்கண்ணு (வயது70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது வீடு தொடர்மழையில் இடிந்து விழுந்தது. இதையடுத்து அவர் வசிக்க வேறு இடம் இல்லாததால் இடிந்து விழுந்த வீட்டின் முன்பாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் பொருட்களை வைத்துக் கொண்டு அதன் அருகிலேயே சமைத்து வசித்துவருகிறார். இதுகுறித்து மூதாட்டி அம்மாக்கண்ணு கூறுகையில், வீடு இடிந்தது குறித்து வருவாய் துறையினருக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை.  தனிநபர் கழிப்பறை கட்டியதற்கு கூட மானிய தொகை ரூ.12 ஆயிரத்தை இதுவரை அதிகாரிகள் வழங்கவில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை எதுவும் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போது குடியிருந்த வீடும் இடிந்து விட்டது. மாவட்ட கலெக்டர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story