2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை


2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 1 Dec 2021 6:02 PM GMT (Updated: 1 Dec 2021 6:02 PM GMT)

இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிவகங்கை, 
சிங்கம்புணரியை சேர்ந்த மனோகரன் என்பவர் தன் வீட்டிற்கு 3 மும்முனை மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2008-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு சுமார் 6 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராகப் பணிபுரிந்த பெரியசாமி என்பவர் மின் இணைப்பு வழங்குவதற்கு தனக்கு ரூ. 500 லஞ்சம் வழங்க வேண்டும் என்றும், அதே அலுவலகத்தில் வணிக உதவியாளராக இருந்த சுப்பிரமணியன் தனக்கு ரூ.600 வழங்க வேண்டும் என்றும் கேட்டார்களாம். இதுகுறித்து மனோகரன் சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட பணத்தை 2 பேரிடமும் கொடுக்கும் போது அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி உதய வேலவன், குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும். தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story