மாடுகள் தொல்லை
ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் உள்ளே வரும் பஸ்களுக்கு இடையூறாக உள்ளது. மாடுகள் பொதுமக்கள், பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- |
தண்ணீர் வினியோகம் செய்வார்களா?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் எம்.பி.டி. சாலை தெருவில் சிறுமின்விசை தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு உள்ளது. அந்த ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதாகி 6 மாதமாக உள்ளதால் தண்ணீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்மோட்டாரின் பழுதை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா? |
-எம்.மணி, வி.சி.மோட்டூர். |
பழுதான சாலை
குடியாத்தம் 4 முனை கூட்ரோடு பகுதியில் பலமநேர் சாலையில் பேவர் பிளாக் சாலை உள்ளது. அங்குள்ள ரேஷன் கடை எதிரில் சாலை பழுதாகி பள்ளம் ஏற்பட்டு இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விடுகிறார்கள். அந்தப் பள்ளம் 6 மாதமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். |
-கே.ஆர்.கண்ணன், குடியாத்தம். |
அரசு பஸ்களில் அவசர எண் பயன்பாட்டுக்கு வருமா?
அரசு பஸ்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு அவசர உதவிக்கு அலைப்பேசி எண் எழுதப்பட்டு இருந்தது. அதன் மூலம் பயணிகள் பயணம் செய்யும்போது தங்களுக்கு ஏற்படுகிற சிரமங்கள். அசவுரியங்கள் குறித்து தகவல் தெரிவித்து தீர்வு கண்டனர். ஆனால் தற்போது அந்த அலைப்பேசி எண் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? |
பழுதான சாலையை சீர் செய்வார்களா?
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஏரி நிரம்பி கோடி போகிறது. அதன் கரைமீது உள்ள தார் சாலை அணங்காநல்லூர், மோட்டூர், சிங்கல்பாடி, கொத்தகுப்பம், கோப்பம்பட்டி, பட்டுவாம்பட்டி, ஆலத்தூர், தட்டாங்குட்டை, பீமபுரம், நத்தம், குடியாத்தம் வழியாக பட்டு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்தச் சாலையின் ஒரு பகுதி மழையால் பழுதடைந்துள்ளது. சாலையில் விரிசலும் ஏற்பட்டுள்ளது-. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் ஏற்பட்டுள்ள பழுதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீர் செய்வார்களா? |
-முனிசாமி, பட்டுவாம்பட்டி. |
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியிடம் காலியாக உள்ளது. இதுபற்றி மாவட்ட மருத்துவத்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நலன் கருதி காலியாக உள்ள செவிலியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். |
-இளங்கோவன், ஆலப்பாக்கம். Article-Inline-AD
|