மதுரகாளியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.69 லட்சம்


மதுரகாளியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.69 லட்சம்
x
தினத்தந்தி 2 Dec 2021 12:29 AM IST (Updated: 2 Dec 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

மதுரகாளியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.69 லட்சம் வருவாயாக கிடைத்தது

பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி நகைகள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையிலும், கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன், சரக ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையிலும் கோவிலில் உள்ள 7 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அப்போது உண்டியல்களில் ரூ.69 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரொக்கமும், 439 கிராம் தங்கமும், 699 கிராம் வெள்ளியும், 170 வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக நண்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த ஏப்ரல் மாதம் திறந்து எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story