‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 12:29 AM IST (Updated: 2 Dec 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசலில் தெருவிளக்கு இயக்கப்படும் மின் கம்பம் பெட்டி பாதுகாப்பற்ற முறையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மின்சாதன பெட்டி சரி செய்து கொடுக்கப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிவரஞ்சினி, புதுக்கோட்டை.
சேறும் சகதியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் 5-ம் வீதியில் உள்ள சாலை தற்போது பெய்த தொடர்மழையினால் சேறும்,சகதியாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருபா, புதுக்கோட்டை.
திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர், வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம், ஐஸ்வர்யா எஸ்டேட் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையின் நடுவில் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதித்து மூடப்பட்டன. அப்போது அவை சரியாக மண் கொட்டி மூடப்படாததால், தற்போது, மழை பெய்து சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அத்துடன் குழி தோண்டிய இடம் பள்ளமாக இருப்பதாலும், அதில் மழைநீர் தேங்கி இருப்பதாலும் அந்த சாலையில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் தினமும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லவும், அவசர தேவைக்கும் ஆட்டோக்கள், வேன்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இந்த பகுதிக்கு வரமுடிவதில்லை. எனவே பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய இடங்களில் கான்கிரீட் கலவை கொட்டி சாலையை செப்பனிட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜலட்சுமி, கொட்டப்பட்டு, திருச்சி.
ஆபத்தான கிணறு 
திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி அடைக்கல அன்னை நகர் 2-வது குறுக்கு தெருவில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் மழை நீர் நிரம்பி பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த கிணற்றில் ஆடு, மாடுகள் தவறி விழுந்து அடிக்கடி இறக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழவும் வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான இந்த கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, திருவெறும்பூர், திருச்சி.
ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோர்ட்டு எதிரே உள்ள தார் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீஜா, அரியலூர்.
மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏராளமான கால்நடைகள் இறந்து விட்டன. இதனால் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே புதுக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெங்கசாமி, புதுக்கோட்டை.

Next Story