மாவட்ட செய்திகள்

நகையை திருடிய வாலிபர் கைது + "||" + Jewelry theft

நகையை திருடிய வாலிபர் கைது

நகையை திருடிய வாலிபர் கைது
அருப்புக்கோட்டையில் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் சொக்கம்மாள் (வயது 58). இவர் தனது வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகளை காணவில்லை என டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது வீட்டிற்கு வந்த பாளையம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (31) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பாளையம்பட்டி தேரடிவீதியில் நின்று கொண்டிருந்த சரவணக்குமாரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொக்கம்மாள் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரிடமிருந்து 3 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் சரவணக்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவிலில் நகை திருட்டு
கோவிலில் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நகை திருட்டு
கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
3. 6½ பவுன் நகை திருட்டு
6½ பவுன் நகை திருட்டு
4. செஞ்சி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
செஞ்சி அருகே வீடு புகுந்து நகையை மா்ம மனிதா்கள் திருடி சென்று விட்டனா்.
5. மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு
ராமநாதபுரம் அருகே மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடப்பட்டது.