மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயர் அலுவலகம் முன்பு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மின் பணியாளர்களுக்கு தொய்வின்றி பணி நடக்க தேவையான தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தியும், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆகியவை வழங்க கோரியும், 1. 12. 2019 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டியதற்கான பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மின்வாரிய ஊழியர் சங்க நிர்வாகிகள் சவுந்தரபாண்டியன், ஜெய்சங்கர், ராஜ்குமார், ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story