2 மாதங்களில் 375 ரவுடிகள் கைது


2 மாதங்களில் 375 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 1 Dec 2021 7:14 PM GMT (Updated: 1 Dec 2021 7:14 PM GMT)

2 மாதங்களில் 375 ரவுடிகள் கைது

திருச்சி, டிச.2-
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பொறுப்பேற்ற பின்பு, கடந்த 2 மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்ட 375 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற செயலில் ஈடுபடாத வகையில் 158 ரவுடிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிணைபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. பிணை பத்திரத்தை மீறி செயல்பட்ட 10 ரவுடிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 18 ரவுடிகள், திருட்டு -வழிப்பறியில் ஈடுபட்ட 8 ரவுடிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவர், போதை பொருள் விற்றதாக ஒருவர் கைது. மேலும் 28 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல கஞ்சா விற்றதாக 15 பேர் கைது செய்யப்பட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 70 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story