வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 12:53 AM IST (Updated: 2 Dec 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம் 
ராஜபாளையம் கூரைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 50). இவரது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் கஞ்சா செடிகளை குருநாதன் வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்  வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வந்து பார்த்த போது அரசால் தடை செய்யப்பட்ட 3 கஞ்சா செடிகள் 10 அடி உயரம் வரை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து குருநாதனை கைது செய்த போலீசார், 1 கிலோ எடையுள்ள 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story