பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
பஸ் படிக்கட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி, டிச.2-

மாணவ-மாணவிகள்
உலக நாடுகளையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றுபடிப்படியாககுறையதொடங்கியதையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பல நாட்கள் ஊரடங்கு காரணமாக விடுமுறையில் கழிந்தது.
தற்போது தொடர் மழையின் காரணமாக மேலும் சில நாட்கள் விடுமுறை விடப்பட்டன. எஞ்சியுள்ள நாட்களில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்களும், கற்று அறிந்து கொள்ள வேண்டிய நிலையில்மாணவர்களும்உள்ளனர். ஆகையால்மாணவ-மாணவிகள்தினந்தோறும் தவறாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது.
படிக்கட்டுகளில் பயணம்
ஆனால் திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை பார்க்கும் போது, நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. மழை பெய்தாலே மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக பஸ் பயணம் என்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாகச பயணமாக மாறியுள்ளது. 2 பேருக்கு மேல் நிற்க முடியாத பஸ் படிக்கட்டில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டியடித்து கொண்டு ஏறி தொங்கி கொண்டு சென்று வருகிறார்கள். புத்தக பைகளையும் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் இத்தகைய மாணவர்களின் பயணம் என்பது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் உள்ளது.
ஆபத்தை உணர்வதில்லை
நேற்று முன்தினம் காலை வேலூரில் தனியார் பஸ் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் தொங்கி கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருக்க பஸ்சை திருப்பியபோது, சர்வீஸ் சாலை சுவற்றில் மோதியது. இதில் அந்த பஸ்சில் தொங்கி கொண்டு சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தனர். அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. ஆனால் திருச்சியில் தினம், தினம் காலை, மாலை நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்வதற்கு பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதே காரணமாகும். ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்பதாலும், அந்த பஸ்சை தவறவிட்டால் அடுத்த பஸ் வருவதற்குள் தாமதமாகி விடும் என்பதாலும் படிக்கட்டில் தொங்கி கொண்டாவது சென்றுவிடலாம் என மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற படிக்கட்டு பயணத்தில் நிறைந்து இருக்கும் ஆபத்தை அவர்கள் உணர தவறிவிடுகிறார்கள்.

Related Tags :
Next Story