லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல நடித்து தொழில் அதிபரிடம் வழிப்பறி


லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல நடித்து தொழில் அதிபரிடம் வழிப்பறி
x
தினத்தந்தி 2 Dec 2021 1:00 AM IST (Updated: 2 Dec 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் பிடிபட்டனர்.

மதுரை,

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் வழிப்பறி செய்த 2 பேர் பிடிபட்டனர்.

ெதாழில் அதிபரிடம் மிரட்டல்

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 55). தொழில் அதிபர். சம்பவத்தன்று இவர் மேலகோபுரத் தெருவில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க தனியாக சென்றுள்ளார். அங்கு அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த 2 பேர் அவருக்கு அறிமுகம் ஆனார். பின்னர் அவர்கள் 3 பேரும் படம் பார்த்து விட்டு டவுன்ஹால் ரோட்டில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது வெங்டேசன் அவரை பற்றியும், அவரது தொழிலை பற்றியும் தெரிவித்துள்ளார். அப்போது உடன் இருந்தவர்கள் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் என்றும், உங்கள் தொழிலில் பல்வேறு தவறுகள் நடக்கிறது. அதனால் தான் உங்களை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம் என்று கூறி மிரட்டினர். மேலும் உங்கள் மீது வழக்குகள் தொடராமல் இருக்க ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன வெங்கடேசன் அவரிடமிருந்த அரை பவுன் தங்க மோதிரத்தை கழற்றி கொடுத்துள்ளார்.

போலீசில் புகார்

பணத்தை ஒரிரு தினங்களில் கொடுத்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் செல்போன் நம்பரை கொடுத்து பணத்தை உடனே ஏற்பாடு செய்து தங்களுக்கு போன் செய்யுமாறு கூறி விட்டு சென்று விட்டனர். ஆனால் அவர்கள் பணம் குறித்து அவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் திடீர்நகர் போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து புகார் செய்துள்ளார். 
உடனே அவர்களை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரூ.3 லட்சத்துடன் டவுன்ஹால் ரோட்டில் உள்ள விடுதியில் காத்திருப்பதாக அவர்களுக்கு தெரிவிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.

2 பேர் பிடிபட்டனர்

அங்கு அவர்கள் பணத்தை வாங்க வந்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த அஜிசெரிப்(40), திண்டுக்கல் மாவட்டம் பச்சமலையான் கோவில் பகுதியை சேர்ந்த ரவிசங்கர்(45) என்பதும், அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story