விஷம் குடித்து கணவன் மனைவி தற்கொலை
சேதுபாவாசத்திரம் அருகே வங்கி கடன் தவணை தொகையை செலுத்த முடியாததால் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் அருகே வங்கி கடன் தவணை தொகையை செலுத்த முடியாததால் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
ரூ.8 லட்சம் கடன்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மேல பூவாணத்தை சேர்ந்தவர் அருள்சாமி (வயது54). இவரது மனைவி சவுரியம்மாள் (52). இவர்களுக்கு சவரிசுரேஷ் (35), ஆரோக்கியசெபஸ்டியான் (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சவரிசுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அருள்சாமி வீட்டில் பலகாரம் செய்து கடைகளில் விற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் வங்கியில் ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார். பலகாரம் விற்று வந்த வருமானத்தில் அருள்சாமி வங்கிக்கு தவணை தொகை செலுத்தி வந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
கொரோனா ஊரடங்கு மற்றும் மழையால் பலகாரம் செய்யும் தொழில் பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக வங்கி கடன் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அருள்சாமி, சவுரியம்மாள் ஆகியோர் நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
வங்கி கடனின் தவணை தொகை செலுத்த முடியாததால் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story