2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
கும்பகோணம் அருகே 2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபரை மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
ும்பகோணம்:
கும்பகோணம் அருகே 2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபரை மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
திருமணத்திற்கு எதிர்ப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது27). இவர் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருவலஞ்சுழி மணப்படையூர் பகுதியை சேர்ந்த கங்காஸ்ரீ (26) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்தார். அப்போது சங்கரநாராயணன், கங்காஸ்ரீயுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு சங்கரநாராயணன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி சங்கரநாராயணன், கங்கா ஸ்ரீ இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. பின்னர் இருவரும் தஞ்சை பூக்காரத்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 மாதமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
முற்றுகை போராட்டம்
சங்கரநாராயணனுக்கு அவரது தந்தை வேலாயுதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு சங்கரநாராயணனும் சம்மதம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த கங்காஸ்ரீ இதுகுறித்து கும்பகோணம்
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் கங்காஸ்ரீ தரப்பினர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளார். இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கங்காஸ்ரீக்கு ஆதரவாக கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கைது
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் புகாரினை பெற்று உடனடியாக வழக்குப் பதிவு செய்து சங்கரநாராயணனை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். 2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story