தஞ்சையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
தஞ்சை ரெயிலடியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார சுகாதார நிலையங்கள் என 30 இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய்தொற்று உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
இலவசமாக மருந்து
மேலும் முதல்கட்ட பரிசோதனையானது 77 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது, நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு சிகிச்சை தஞ்சை மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி ஆகிய இரண்டு ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊர்வலலம் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி காந்திஜி சாலை, இர்வீன்பாலம், அண்ணாசிலை வழியாக ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் தன்னார்வலர்கள், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் பசுபதீஸ்வரர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் திலகம், காசநோய் துணை இயக்குனர் டாக்டர் மாதவி, மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story