ஆலங்குளம் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆலங்குளம் அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேல தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் அடைக்கலராஜ் என்ற அருள் (வயது 25). பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.
உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இவருக்கு கண் பார்வைத்திறன் சற்று குறைபாடு இருந்ததால், ராணுவத்தில் சேர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அருள் நேற்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த அருளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story