தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலையில் தேங்கும் மழைநீர்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் ஊராட்சி வாய்க்கால்பட்டறை காலனி பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் புகுந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீ.தமிழ்ச்செல்வன், வெண்ணந்தூர், நாமக்கல்.
சேலம் மாநகராட்சி பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பழைய காலனி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் பல வருடங்களாக சாக்கடை கால்வாய் நீர் செல்ல வழி இல்லாமல் வெளியேறி தெருவில் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி மலேரியா, டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இதுபற்றி புகார் தெரிவித்தும் பலன் இல்லை. எனவே சாக்கடை நீர் முறையாக வெளியேற கால்வாய் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், காந்திநகர், சேலம்.
====
தண்ணீர் பிரச்சினை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாசலம் புதூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு செயல்படாத தண்ணீர் டேங்க் 2 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. மீதி நாட்களில் இந்த ஆழ்துளை கிணற்றை நம்பிதான் இருக்க வேண்டிய உள்ளது. இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து தண்ணீர் டேங்கை சரிசெய்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், தாரமங்கலம், சேலம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை-1 தினசரி மார்க்கெட் அருகில் கூலிலைன் பகுதி 23-வது வார்டில் நீண்ட நாட்களாக குடிநீர் செல்லும் மெயின் குழாய் சேதமடைந்து உள்ளது. இதனால் தினமும் குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மேட்டூர் அணை,சேலம்.
தார் சாலை சீரமைக்கப்படுமா?
சேலம்-எடப்பாடி ஒன்டிப்பனை பஸ் நிலையம் அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
- ஊர்மக்கள், ஒன்டிப்பனை.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தின்பின் பகுதியை ஒட்டி தொடங்கும் தார் சாலை 2 கி.மீ. தூரத்தில் தடங்கம் பகுதியில் தர்மபுரி- சேலம் 4 வழி சாலையில் இணைகிறது. இந்த சாலையை தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தார் சாலையில் பெரும் பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், பாரதிபுரம், தர்மபுரி.
===
தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் இண்டர்ஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. சில நேரங்களில் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.
சேலம் அழகாபுரம் அம்பேத்கர் காலனியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துவிட்டன. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் தெருநாய்கள் மீது மோதி கீழே விழுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அழகாபுரம், சேலம்.
Related Tags :
Next Story