ஜலகண்டாபுரம் அருகே 14 வயது சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
ஜலகண்டாபுரம் அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
ஆசை வார்த்தை கூறி...
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது ஆசைவார்த்தை கூறி சிறுமியை மூர்த்தி அழைத்து சென்று அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமியை மூர்த்தி கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
தொழிலாளி கைது
இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி காரணமாக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த சிறுமியை பரிசோதித்த மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சிறுமியை மூர்த்தி ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மூர்த்தியை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story