கனமழையால் ரோடு துண்டிப்பு: போக்குவரத்து பாதிப்பு
திருப்பரங்குன்றம் அருகே ரோடு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே ரோடு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
ஒடை குறுகியது
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் கரடிப்பட்டி ஊராட்சி உள்ளது. கரடிப்பட்டி முதல் தேனி மெயின்ரோடு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை அமைந்து உள்ள ரோட்டை இந்த பகுதி மக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒந்திமலை கல்குவாரிக்கு இந்த ரோட்டின் வழியேதான் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளும் சென்று வருகிறார்கள். ரோட்டின் பக்கவாட்டில் பெரிய ஓடைகள் இருந்து வந்துள்ளது. அதில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து மேலக்குயில்குடி, கரடிப்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று வந்துள்ளது. ஆனால் அந்த ஒடையானது நாளடைவில் குறுகியது.
ரோடு துண்டிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.ஓடை மிகவும் குறுகியதாக இருந்ததால் தண்ணீர் கண்மாய்களுக்கு நேரடியாக செல்லாத நிலை ஏற்பட்டது. இதில் ரோட்டின் நடுவே மழைவெள்ளம் பாய்ந்தோடியதால் அவை முழுமையாக சேதமடைந்து துண்டிப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த 2 நாட்களாக அந்த ரோட்டின் வழியே போக்குவரத்து தடைபட்டது. இதனால் பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சாைலயை பாலம் அமைத்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
---------
Related Tags :
Next Story