நெல்லை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு காப்பாற்ற சென்ற வாலிபர் காயம்


நெல்லை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு காப்பாற்ற சென்ற வாலிபர் காயம்
x
தினத்தந்தி 2 Dec 2021 3:07 AM IST (Updated: 2 Dec 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு

நெல்லை:
நெல்லை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாபமாக பலியானார். அவரை காப்பாற்ற சென்ற வாலிபரும் காயம் அடைந்தார்.
மூதாட்டி
நெல்லை அருகே உள்ள கரையிருப்பு வடக்கு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாலை தேவர். இவருடைய மனைவி சீனியம்மாள் (வயது 70). இவர் நெல்லை அருகன்குளத்தில் உள்ள கோவில் கோசாலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள மாடுகளுக்கு வைக்கோல் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள இரும்பு கதவை திறந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது கதவில் ஏற்கனவே மின்கசிவு ஏற்பட்டு இருந்துள்ளது. இதனால் சீனியம்மாள் மீது மின்சாரம் தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலை பார்த்து வரும் கங்கைகொண்டானை சேர்ந்த சின்னத்துரை (24) ஓடி வந்து, சீனியம்மாளை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சீனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னத்துரைக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story