டெம்போ மோதி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பலி


டெம்போ மோதி சூப்பர் மார்க்கெட்  உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 3:20 AM IST (Updated: 2 Dec 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே டெம்போ ேமாதி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.

கருங்கல்:
கருங்கல் அருகே டெம்போ மோதி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.
சூப்பர் மார்க்கெட்   உரிமையாளர்
இரணியல் கோட்டை கதம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 57). இவர், திங்கள்சந்தை பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 
இவர், தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கருங்கல் பகுதியில் இருந்து தொலையாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
டெம்போ மோதியது
மாங்கரை பகுதியில் சென்றபோது மணவாளக்குறிச்சி சின்னவிளையை சேர்ந்த அருள் பிரேம்ஸ் (27) என்பவர் ஓட்டி வந்த டெம்போ சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய டெம்போ நிற்காமல் சென்றது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் வாகனங்களில் டெம்போவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து கருங்கல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து சிவகுமாரின் மனைவி உமாராணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story