அ தி மு க முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்துக்கு மிரட்டல்


அ தி மு க முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்துக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 2 Dec 2021 5:29 AM GMT (Updated: 2021-12-02T10:59:40+05:30)

அ தி மு க முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்துக்கு மிரட்டல்

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்(வயது 59). விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 28-ந்தேதி மர்மநபர் ஒருவர் ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்திருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சி.வி.சண்முகம் தனது உதவியாளர் ராஜாராம் மூலம் திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார், சி.வி.சண்முகம் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார்? என விசாரித்து வருகிறார்கள். 

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் சி.வி. சண்முகத்துக்கு கொலை மிரட்டல் வந்தது. இது தொடர்பாக ரோஷணை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு மிரட்டல் வந்து இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story