தோப்புகளில் தண்ணீர் தேங்கியதால் தேங்காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதி


தோப்புகளில் தண்ணீர் தேங்கியதால் தேங்காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 2 Dec 2021 11:00 AM IST (Updated: 2 Dec 2021 11:00 AM IST)
t-max-icont-min-icon

தோப்புகளில் தண்ணீர் தேங்கியதால் தேங்காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதி

நெகமம்

மழை காரணமாக நெகமம் பகுதியில் தோப்புகளில் தண்ணீர்  தேங்கி நிற்பதால் தேங்காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகிறார்கள். 

பரவலாக மழை 

பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பி.ஏ.பி. பாசன நிலங்களில் தென்னை அதிக ளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சிலர் தென்னந்தோப்பு களில் ஊடுபயிரும் சாகுபடி செய்து உள்ளனர். 

இந்த பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதால் பலர் சொட்டுநீர் மூலம் தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். இந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. 

தோப்புகளில் தண்ணீர் 

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சில இடங்களில் தென்னந்தோப்புகளில் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. 

இந்த தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தென்னை மரங்களில் தேங்காய் அறுவடைக்கு தயாராக இருந்தாலும் அதை பறிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் விவசாயிகள் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வேர் அழுகல் நோய் 

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து தண்ணீர் தென்னை மரங்களின் வேர்ப்பகுதியில் தேங்கி நிற்பதால், வேர் அழுகல் நோய் ஏற்பட்டு தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. 

இந்த நிலை நீடித்தால், தென்னையில் காய்ப்புத்திறன் குறைந்து விடும். எனவே நாங்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

தழைச்சத்து பயிர்கள் 

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, தென்னந்தோப்புகளில், மழைநீர் தேங்கியிருந்தால், வடிகால் வசதி ஏற்படுத்தி, நீரை வடிக்க வேண்டும். மழை காலம் முடிந்தும், மரங்களுக்கு உரமிட்டு பராமரிக்க வேண்டும். 

தென்னை மரத்தை சுற்றிலும் வட்டப்பாத்தி அமைத்து, சணப்பை, தட்டைப்பயிறு, கொள்ளு, பயிர் வகைகள் உள்ளிட்ட தழைச்சத்து கொடுக்கும் பயிர்களை விதைத்து மரங்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.


Next Story