மருத்துவ பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
மருத்துவ பணியாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகர்,
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பல் நோக்கு பணியாளர்கள் அனைவருக்கும் பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு நான்கு மாத ஊதிய நிலுவை உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து நேற்று டாக்டர் உதயபிரகாஷ் தலைமையில் பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் 4 மாத கால ஊதிய நிலுவைத்தொகையை வழங்க கோரியும், ஊக்கத்தொகை வழங்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
Related Tags :
Next Story