11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை


11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 2 Dec 2021 2:00 PM IST (Updated: 2 Dec 2021 2:00 PM IST)
t-max-icont-min-icon

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.15 ஆயிரம் அரபாதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ரவி (வயது 58). கடந்த 2018-ம் ஆண்டு இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அரபாதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Next Story