வெள்ள பாதிப்பு பகுதியில் இலவச சித்த மருந்து வழங்கும் நடமாடும் வாகனம்


வெள்ள பாதிப்பு பகுதியில் இலவச சித்த மருந்து வழங்கும் நடமாடும் வாகனம்
x
தினத்தந்தி 2 Dec 2021 2:26 PM IST (Updated: 2 Dec 2021 2:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வருகிற 23-ந்தேதி 5-வது சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சித்தா தினத்துக்கான ‘கவுண்ட்டவுன்’ மற்றும் மழைக்கால சித்த மருத்துவ முகாம் இயங்கும் நடமாடும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மீனாகுமாரி, தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவசமாக சித்த மருந்து வழங்கப்பட உள்ளது. மொத்தம் 21 நாள் நடைபெறும் விழாவில் நாளை(3-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம்(4-ந்தேதி) கோவை வேளாண் பல்கலைகழகத்தில் சித்த மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் சித்த மருத்துவம் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல போட்டிகள் நடைபெற உள்ளது.

இறுதியாக ‘தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கு’ என்ற தலைப்பில் வருகிற 23-ந்தேதி தேசிய சித்த மருத்துவ தினம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொண்டாடப்பட உள்ளது.


Next Story